நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 34,791 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை 3,20,63,616 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 366 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 4,39,895 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 67,09,59,968 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கேரளாவில் 32,097 பேர் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டுள் ளனர். 188 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







