ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஐந்து மதுபான பார்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாமாக அரசு மதுபான கடைகளை ஒட்டி சட்டவிரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தன. இப் புகார்கள் குறித்து காவல்துறையினரும் அவ்வப்போது திடீர் சோதனை செய்து மதுபான பார்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். இதற்கிடையே தமிழகத்தில் மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக அரசு கள்ளச்சாராயத்தை ஒழிக்கவும், சட்டவிரோத செயல்படும் மதுபான பார்களை மூடவும் காவல்துறையினருக்கு கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே இதன் தொடர்ச்சியாக ஆண்டிபட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மூலக்கடை,வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் ஐந்து இடங்களில் சட்டவிரோதமாக மதுபான பார்கள் செயல்பட்டு வருவது தெரிவந்தன.
அப்போது சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஐந்து மதுபான பார்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்து மூடினர்.
—கோ. சிவசங்கரன்







