முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக தலைமை கழகம் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் எங்கள் எம்.ஜி.ஆர் பிறந்தநாள்!
தீயசக்தியின் பிடியில் இருந்து மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க, அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கண்டெடுத்த மக்கள் திலகம், திரை ஆளுமையாக தத்துவங்களையும், முதல்வராக மக்கள் நலத் திட்டங்களையும் அள்ளித் தந்த பொன்மனச் செம்மல், இன்றும், என்றும், நம் இதயதெய்வமாக நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளில், கூறிய மக்களாட்சியை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் அமைத்திட சூளுரைப்போம்!
வாழ்க புரட்சித்தலைவர் நாமம்! வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







