முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மக்கள் மனதில் மன்னராக நிரந்தர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் தலைவர்,
இன்று தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் திராவிட ஆட்சி செய்யும் திமுகவை தொடர் தோல்விகளால் அலறவிட்டவர்.
நேற்று, இன்று, நாளை என்று, என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் வள்ளல், எம்ஜிஆர் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







