“திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது கூட குண்டாஸ் போட்டது!” – அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது கூட குண்டாஸ் போட்டு உள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நீட் தேர்விற்கு எதிராக நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டத்தில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது கண்டணத்திற்கு உரியது என தெரிவித்தார்.

நீட் தேர்வு நமக்கு தேவையில்லை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை,
நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது இந்த தேர்வை ஒன்றிய அரசு மட்டுமே தடுக்க முடியும் எனவும் கூறினார்.

கடந்த கால திமுக ஆட்சியில் நீட் தேர்வை ஒழிக்க ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அது போல ஒரு பொய்யான கருத்தை நாங்கள் சொல்ல முடியாது. மக்களை பொய்யான நம்பிக்கையை கொடுக்க முடியாது எனவும் நீட் தேர்வை மத்திய அரசு நீதிமன்றம் தீர்ப்பு மூலம் கொண்டு வந்தது. எனவே முறையாக தான் இதற்கு முடிவு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என கூறுவது பொய் எனவும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் குளறுபடி தான் நடக்கிறது எனவே இந்த குளறுபடியான தேர்வில் தரமற்றவர்கள் மருத்துவராக வர வாய்ப்புள்ளது. நீட் தேர்வை நடத்த முடியாத சூழலில் தான் நிர்வாகம் உள்ளது. அந்த தேர்வே தேவையில்லை என்பது நான் எங்கள் நிலைப்பாடு என கூறினார்.

மேகதாது விவகாரம் தொடர்பாக முதல்வர் உடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தான கேள்விக்கு,

மேகதாது விவகாரம் தொடர்பாக அது சம்பந்தப்பட்ட வல்லூனர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உடன் முதல்வர் தலைமையில் முதல் கட்ட ஆலோசனை மேற்கொண்டோம். வரக்கூடிய நாட்களில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளோம் என தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என நாங்கள் அறிவிக்க உள்ளோம் என கூறினார்.

நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளாத்திகுளம் எம்எல்ஏ கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு,

விளாத்திகுளம் எம்எல்ஏ பேசியதை அனைவரும் பார்த்தோம், முதலமைச்சரின் கையை ஓடைப்பேன் என பேசி இருக்கிறார் அவர் பேசியதிற்கு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த கால திமுக ஆட்சியில் அவர்கள் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது குண்டாஸ் போட்டு உள்ளனர். 70 வயது பாட்டியை பிடிக்க ஐந்து தனிப்படை அமைத்தது தான் கடந்த கால திமுக ஆட்சியில் தான் என கூறினார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மேடையில் முதலமைச்சர் மீது அவதூறாக பேசுவதும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவிற்கும் இப்படி பேசுவது சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் எனவும் அப்போது தவெக கட்சியை சேர்ந்தவர்கள் இருந்தால் அங்கே கை கலப்பு பிரச்சினையாக இருக்கும் என கூறினார்.

சட்டப்படி அவர் பேச்சுக்கு புகார் கொடுக்கப்பட்டு காவலர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுவெளியில் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுப்பது போன்று பேசினால் அது சட்ட விரோத செயல் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.