காதலுக்கு எல்லைகள் இல்லை என்று கூறுவது மீண்டும் ஒரு ஜோடியால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த ஜூலி என்பவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த அர்ஜீன் என்ற இந்தியரைக் காதலித்து விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். தங்களுக்குள் எப்படி காதல் ஏற்பட்டது என்பதை ஜூலியே சொல்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“என் பெயர் ஜூலி. நான் ஒரு ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். அர்ஜூன் ஒரு இந்தியர். நாங்கள் துபாயில்தான் சந்தித்துக்கொண்டோம். அப்போது இருவரும் காதலில் விழுந்தோம். சில வாரங்களுக்குப் பிறகு நான் எனது நாட்டுக்குச் சென்று விட்டேன். தூரம்தான் எங்களை ஒன்றிணைத்தது. அர்ஜூனுக்காக இந்தியா வந்தேன். நான் அர்ஜூனின் குடும்பத்தைச் சந்தித்தேன். ஹோலி பண்டிகையை முதல் முறையாக கொண்டாடினேன். இந்தியா மீதும் அதைவிட அதிகமாக அர்ஜூன் மீதும் காதலில் விழுந்தேன். இருவருக்கும் புரிதல் ஏற்பட்ட பிறகு நாங்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வாழத்தொடங்கினோம். வீட்டிற்கான மளிகை பொருட்கள் வாங்குவது முதல் என்னை பார்த்துகொள்துவரை எல்லா நாளும் எனக்கு சாகசமாக இருந்தது. ” இவ்வாறு ஜூலி தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தமது கண்டம் கடந்த காதல் பற்றி விவரித்த ஜூலி, “நாங்கள் ஒன்றாக வாழத்தொடங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு தாஜ்மஹாலுக்கு முன்னால் அர்ஜூன் என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறினார். கூடிய விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இரண்டு அன்பு உள்ளங்கள் காதலில் விழுந்தால் வெற்றியடையும் என்பதே உண்மை.