ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம்-2 திரைப்படம், அடுத்ததாக சீன மொழியில் ரீமேக் ஆக உள்ளது. திரிஷ்யம் முதல் பாகத்தின் ரீமேக்கைப் போல், தற்போது 2-ம் பாகத்தின் திரைக்கதையிலும் சிறிய மாற்றம் செய்ய உள்ளனர்.
மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த திரைப்படம் “த்ரிஷ்யம்”. விறுவிறுப்பான திரில்லர் கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் மக்களிடையே உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இப்படம் தமிழில் கமல்ஹாசன் ,கௌதமி நடிப்பில் பாபநாசம் எனும் தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இப்படம் பெரும் வரவேற்பை பெட்ரா நிலையில், இதன் பின் 2019 ஆம் ஆண்டு இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இதனையடுத்து சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு சென்ற ஆண்டு ஷாம் குவா இயக்கத்தில் “Wu Sha” என்னும் தலைப்பில் டிசம்பர் 13 அன்று வெளியிடப்பட்டு 168 மில்லியன் டாலர் வருமானத்தை பெற்றது.
மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரிஷ்யம் 2 திரைப்படத்தை, முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்தையும் சீன மொழியில் ரீமேக் செய்கின்றனர். ஒரு சில மாற்றங்களுடன் த்ரிஷ்யம் 2 மீண்டும் சீன மொழயில் ரீமேக் செய்யப்படுகிறது. மக்களிடையே இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.







