மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி, தமிழ்நாட்டின் 38 -வது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது. இதனையடுத்து 100 கோடி ரூபாய் செலவில், மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணிக்கு, ஏற்கனவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 109 புதிய பணியிடங்களுக்கான அதிகாரிகள் நியமனத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளுக்கு ஊதியம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக, 8 கோடியே 28 லட்சம் ரூபாய், நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.