கபசுரம் குடிக்கும் கஜமுகன்!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா நோய் தாக்கும் ஆபாயம் உள்ளதால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள…

கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழ்நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா நோய் தாக்கும் ஆபாயம் உள்ளதால் மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் யானைக்கு முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று கண்டறிப்பட்டது.

விலங்குகளையும் கொரோனா தாக்கும் சூழ்நிலையில், முன்னெச்சரிக்கையாக மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் உள்ள அபாயம்பாள் யானைக்கு, பாகன் தினமும் கபசுரக் குடிநீரை வழங்கி வருகிறார்.

மேலும், கோடை வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளும் வகையிலும், உடல் ஆரோக்கியத்திற்காகவும் மண்குளியலும் இடுகிறது அபாயம்மாள் யானை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.