நாடு முழுவதும், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 96.97 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 3 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 634 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 48 ஆயிரத்து 786 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து, மேலும், 61 ஆயிரத்து 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை, 96.97 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், புதிதாக ஆயிரத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை, 3 லட்சத்து 99ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 41 கோடியே 20 லட்சத்து 21 ஆயிரத்து 494 பேருக்கு, தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







