நடிகை டாப்ஸி, Outsiders Films என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாக டாப்ஸி, தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் ‘ராஷ்மி ராக்கெட்’, ‘டூபாரா’, ‘சபாஷ் மித்து’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது புதிதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் டாப்ஸி பதிவிட்டுள்ளார். ‘அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தயாரிப்பு நிறுவனத்தை தனது நண்பர் பிரஞ்சல் கந்தியா என்பவருடன் இணைந்து தொடங்கியுள்ளார்.
https://twitter.com/taapsee/status/1415513874091020292
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அவர், தன் மீது அதீத அன்பையும் நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். நன்றியை திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ள அவர், கூடவே மிகப்பெரிய பொறுப்பும் சேர்ந்து கொள்வதாக பதிவிட்டுள்ளார். ’அவுட்சைடர் பிலிம்ஸ்’ மூலம் ஒரு தயாரிப்பாளராக தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பதாக டாப்ஸி குறிப்பிட்டுள்ளார்.
அவுட்சைடர் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ‘Blur’ என்ற திரைப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும் டாப்ஸி அறிவித்துள்ளார். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் டாப்ஸி நடிக்க, அஜய் பால் இயக்கவுள்ளார்.








