தென்கிழக்கு ஆசியாவின் இந்தோசீனா தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடு வியட்நாம். கடந்த ஒருவார காலமாக இந்நாட்டின் குவாங் நாம், தாக்லாங், கான் ஹோவா உள்பட 5 மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வியட்நாமில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் 12 பேர் இன்னும் காணவில்லை என்றும் அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.








