வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசிமகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று 17-ம் நாள் நாள் மாசிமக திருவிழாவில் சந்திரசேகர சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்பு மின்விளக்கால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெள்ளிரிஷப வாகனத்தில் சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. அத்துடன் 63 நாயன்மார்கள் மற்றும் 10 தொகையடியார்கள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாசிமக திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மூன்றாம் தேதி நடைபெற உள்ளது.








