இயக்குனர் சுதீப்தோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான படம் ’தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். வணிகரீதியாக இப்படம் வெற்றியடைந்திருந்தாலும் பல்வேறு சர்ச்சைகளையும் உண்டாக்கியது. மதநல்லிணத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல்வேறு தரப்பினரும் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் இப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமானது ‘தி கேரளா ஸ்டோரி 2 : கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. காமாக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இப்படத்தில் உல்கா குப்தா, ஐஸ்வர்யா ஒஜா, அதிதி பாட்டியா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தி கேரளா ஸ்டோரி 2 திரைப்படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் நேற்று முன்தினம் இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் சர்ச்சையை கிளப்பும் என்பது போல டிரெய்லர் அமைந்துள்ளது.
இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெறுப்பைத் தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் தொடர்ச்சியான பாகம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். முதல் பாகத்தின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரல் மற்றும் அப்பட்டமான பொய்களை ஏற்கனவே பார்த்த கேரளா, நமது மதச்சார்பற்ற கட்டமைப்பை அவமதிப்புடன் சித்தரிக்கும் இந்த முயற்சியை மீண்டும் நிராகரிக்கும்.
வகுப்புவாத மோதலைத் தூண்டும் நோக்கில் புனையப்பட்ட கதைகள் எவ்வாறு தாராளமாக அனுமதிக்கப்படுகின்றன, அதே நேரத்தில் கலை விமர்சன வெளிப்பாடுகள் எவ்வாறு வாயடைக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சியளிக்கிறது. நமது அமைதியாக நல்லிணக்கமான நிலத்தை பயங்கரவாதத்தின் மையமாக சித்தரிக்க முயலும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். வாய்மையே வெல்லும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.







