நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையில் கால் மேல் கால் போட்டு படுத்து உறங்கிய போதை ஆசாமியின் அட்டூழியங்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 5 முனை பகுதியில் மதுக்கடையை திறக்க சில மாதங்களுக்கு முன்பு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து தினமும் குடிமகன்கள் அப்பகுதியில் குடித்துவிட்டு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் பெண்கள் என அனைவரையும் கேலி செய்வதும் அவர்களுடன் தகாத முறையில் நடந்து கொள்வதும் வழக்கமாகவே உள்ளது.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் ஒருவர் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலையின் நடுவே கால் மேல் கால் போட்டு படுத்துக் கொண்டு அட்டூழியம் செய்தது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு நடு ரோட்டில் படுத்து உறங்கிய அந்த நபரை அப்பகுதி மக்கள் இழுத்து அப்புறப்படுத்தினர். இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







