தமிழ் பெண்ணுக்கும் வங்க தேச பெண்ணுக்கும் டும்..டும்..டும்..

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண், வங்க தேசத்தைச் சேர்ந்த பெண்ணை வைதீக முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.   மதுரையை பூர்வீகமாக கொண்டவர் சுப்பிரமணி. இவர் குடும்பத்துடன் கனடாவின் கல்கரியில் குடியேறிய நிலையில், அவரது மகள்…

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண், வங்க தேசத்தைச் சேர்ந்த பெண்ணை வைதீக முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

 

மதுரையை பூர்வீகமாக கொண்டவர் சுப்பிரமணி. இவர் குடும்பத்துடன் கனடாவின் கல்கரியில் குடியேறிய நிலையில், அவரது மகள் சுபிக்சா சுப்பிரமணி என்பவர் வங்கதேச இந்து குடும்பத்தைச் சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
கனடாவில் நடந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் சந்தித்தபோது இந்த காதல் மலர்ந்துள்ளது.

பெற்றோரிடம் 19 வயதில் தனது காதலை சுபிக்சா கூறிய நிலையில், 6 ஆண்டுகால போராட்டத்துக்கு பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 31ஆம் தேதி சென்னையில் பிராமண முறைப்படி அவர்கள் திருமணம் விமர்சையாக நடைபெற்றது. தங்களின் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு சடங்குகளையும் அதிக கவனத்துடன் தங்கள் குடும்பத்தினர் செய்ததாக சுபிக்சா பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு வங்க தேசத்தில் மௌல்விபஜார் என்ற இடத்தைச் சேர்ந்த டீனா தாஸ், 19 வயதில் ஆண் ஒருவரை திருமணம் செய்து 4 ஆண்டுகள் வாழ்ந்தபோது தான், தாம் ஒரு தன் பாலின ஈர்ப்பாளார் என்பதை உணர்த்ததாக தெரிவித்துள்ளார். தங்களின் மகள், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் சொந்த பந்தங்களை இழக்க நேரிடுமே என்று பயந்ததாக சுபிக்சாவின் தாய் பூர்ணபுஷ்கலா தெரிவித்துள்ளார். ஆனால், விரக்தியடைந்து தங்கள் பிள்ளைகள் பிரிந்து செல்வதை விட, அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி அருகிலேயே வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.