மதுரை – தேனி சிறப்பு ரயில்சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை – தேனி முன்பதிவில்லா பயணிகள் சிறப்பு ரயில் சேவையானது கடந்த 27-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது. மதுரை வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் இந்த ரயில் சேவையானது இன்று முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.05 மணிக்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக காலை 9.35 மணிக்கு தேனி ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
அண்மைச் செய்தி: ‘தட்கல் முறையில் பத்திரப்பதிவு செய்ய புதிய திட்டம்’
அதேபோல, தேனி ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மதுரை ரயில் நிலையத்தை வந்தடையும் எனவும் இந்த நேர மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயண நேரம் 25 நிமிடம் கூடுதலாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








