தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கு: முன்ஜாமீன் கோரிய நடிகர் மன்சூர் அலிகான்!

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக…

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த நடிகர் விவேக், மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது

இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்,

மனுவில், “தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டாதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லையெனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.