மாங்காடு அருகே இரண்டரை வயது குழந்தையை அடித்துக் கொலை செய்த தாய் மற்றும் இளைஞரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த கார் ஓட்டுனரான செல்வபிரகாசம்(27).ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கும் லாவண்யா
என்பவருக்கும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் ஆனதாகவும் 2021 ஆம் ஆண்டு தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் கடந்த ஆண்டு மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில்
குடியேறிய போது தனது மனைவி லாவண்யாவிற்கும் கீழ்வெட்டில் இருந்த மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதனை கண்டித்ததால் இருவரும் பிரிந்து விட்டோம். அதன் பின்பு தனது மனைவி லாவண்யா மணிகண்டன் உடன் வாழ்ந்து வந்ததாகவும் தனது இரண்டரை வயது மகன் சர்வேஷ்வரனை அவருடனே வைத்துக் கொண்டதாக கூறி இருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனிடையே கடந்த 6ம் தேதி தனது மகன் இறந்து விட்டதாகவும், உடலுக்கு இறுதி சடங்கும் அவர்களே செய்து முடித்து விட்டதாக தகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது தனது மகன் வலிப்பு வந்து இறந்து விட்டதாக லாவண்யா கூறியுள்ளார்.
இதை அடுத்து தனது மகன் சர்வேஸ்வரன் உயிரிழந்ததில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்து அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். விசாரணையில் செல்வபிரகாசம் மற்றும் லாவண்யாவின் மகன் சர்வேஸ்வரனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு கடந்த மே 20ஆம் தேதி போரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்ற பின்பு 27ஆம் தேதி நலமுடன் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனிடையே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் உடனடியாக போரூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுவன் உயிர் இழந்ததில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் சர்வேஷ்வரனைப் பிரேதப் பரிசோதனை செய்து உடலை தாய் லாவண்யாவிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் லாவண்யா ஒன்றுமே அறியாதது போல் உடலை ஐயப்பன்தாங்களில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்துள்ளார்.
இதில் சிவபிரகாசம் புகார் செய்ததை தொடர்ந்து குழந்தை சர்வேஷ்வரன் பிரேத
பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதில் குழந்தை வலிப்பு வந்து உயிர் இழக்கவில்லை என்றும் காயம் ஏற்பட்டு உயிர் இழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து சிதம்பரத்தில் தலைமறைவாக இருந்த லாவண்யா,மணிகண்டனை காவல்துறை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
சிவப்பிரகாசத்திற்கும் லாவண்யாவிற்கும் திருமணம் நடந்த நிலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். லாவண்யா கல்லூரியில் படிக்கும்போது அங்கு பழக்கமான மணிகண்டனும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் திருமணமாகி வசித்து வந்தார். இதில் மணிகண்டனுக்கும், லாவண்யாவுக்கும் மீண்டும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் இது தகாத உறாவக மாறியது.
இதனால் செல்வபிரகாசத்திற்கும் லாவண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் செல்வ பிரகாசம் கோபித்துக் கொண்டு அமைந்தகரையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று விடுவார். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு
அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் கணவருடன் வாழ பிடிக்கவில்லை என போலீசாரிடம் எழுதி கொடுத்துவிட்டு லாவண்யா தனது மகனை தூக்கி கொண்டு நாமக்கல்லில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
லாவண்யாவுடன் மணிகண்டனுக்கு தொடர்பு இருப்பதை தெரிந்தவுடன் மணிகண்டனின் மனைவி கோபித்து கொண்டு சென்று விட்டார். வீட்டில்
மணிகண்டன் மட்டும் தனியாக இருந்த நிலையில் லாவண்யா மணிகண்டனை தொடர்பு கொண்டு அவருடனே வந்து விடுவதாக கூறியதையடுத்து கெருகம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் சர்வேஸ்வரன் உடன் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் செல்வபிரகாசம் சர்வேஷ்வரனை கேட்ட நிலையில் லாவண்யா கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். சர்வேஸ்வரன் இருப்பது இருவருக்கும் இடையூறாக இருந்ததால் குழந்தையை துன்புறுத்தினால் லாவண்யா, சர்வேஸ்வரனை செல்வபிரகாசத்திடம் கொடுத்து விடுவார் என எண்ணி சர்வேஸ்வரனை கடிப்பது, அடிப்பது என துன்புறுத்தி வந்துள்ளார். உடலில் எல்லாம் மணிகண்டன் கடித்துவைத்திருந்த தழும்புகள் இருந்துள்ளது. சம்பவத்தன்று மணிகண்டனின் செல்போனை சர்வேஸ்வரன் தண்ணீரில் போட்டு விட்டதால் ஆத்திரமடைந்து சர்வேஷனை பிடித்து சுவற்றில் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினான்.
இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் வீடு திரும்பிய நிலையில் மீண்டும் வலிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சர்வேஸ்வரன் இறந்தது தெரியவந்தது. மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாகவே சர்வேஸ்வரன் இறந்ததாக தகவல் உறுதியானதையடுத்து மாங்காடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சிறுவனின் தாய் லாவண்யா மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டரை வயது குழந்தை இறந்த விவகாரம், கொலை என கண்டுபிடிக்கப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆதாரங்கள் என்றும் பொய்த்து போவதில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
ரெ.வீரம்மாதேவி