மணிப்பூர் நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மணிப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.  மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது.…

மணிப்பூரில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக நோவனி மாவட்டத்தில் உள்ள துபுல் ரயில் நிலையம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் சிக்கி தவித்தனர். இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு பிரிவினர் மற்றும் ராணுவத்தினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலசரிவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலச்சரிவில் சிக்கியவர்களில் மேலும் 4 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

https://twitter.com/ANI/status/1542743141094408193

இதையடுத்து மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம வழங்கப்படும் என கூறி உள்ளார்.

மணிப்பூரில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு குறித்து பிரதமர் மோடி அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மழைப்பாதிப்புகள் மற்றும் நிலச்சரிவு குறித்து மணிப்பூர் முதமைச்சர் பைரன்சிங்கிடம் கேட்டு கொண்டார். இந்த பாதிப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கும். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.