கொரோனா பரவல் அதிகரிப்பு- முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல் ஆணையர் சைலேந்திரே பாபு, மற்றும்  உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கொரோனா தொற்று பரவல் தற்போது அதிகரித்து வருவதன் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில் 2069 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,094 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா, விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என உயர் அலுவலர்கள் பரிந்துரைத்துள்ளதுடன், தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.