முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை அளிக்க மநீம வலியுறுத்தல்

மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை விடப்படும் என்ற கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் இத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் மூகாம்பிகா இரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறுகால விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக இதை செயல்படுத்தியுள்ள கேரள அரசை மநீம பாராட்டுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் செயல்படுத்திய இந்த திட்டத்தை, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு கேரள அரசு விரிவுபடுத்தியுள்ளது. பெண்கள், சிறுமிகள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீர்க்க இதுபோன்ற முன்னெடுப்புகள் அவசியம்.

மாணவிகளின் நலன் கருதி தமிழ்நாட்டிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதேபோல, கல்லூரி, பள்ளி மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு சிரமங்களைப் போக்க இதுபோன்ற முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தவும், தக்க விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அரசும், கல்வித் துறையும் முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெண்களுக்கான உரிமைகள் முழுமையாக கிடைக்காததால் தான் போராட்டங்கள் ஓயவில்லை- கனிமொழி

Jayasheeba

ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

Halley Karthik

லெஜெண்ட் சரவணன் கடந்து வந்த பாதை!

Web Editor