ஹன்சிகா – சோஹேல் திருமண நிகழ்வு ’ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நிகழ்ச்சியாக வரும் பிப்ரவரி 10ம் தேதி ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கான டிரைலர் இன்று வெளியானது.
நடிகை ஹன்சிகா மோத்வானி சோஹேல் கதுரியாவை திருமண செய்து கொள்வதாக அறிவித்தது முதல் திருமண நிகழ்வு வரை அனைத்தும் இந்த நிகழ்ச்சியில் பதிவு செய்துள்ளனர்.
இன்று வெளியான டிரைலர் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தனது முன்னாள் ரிலேஷன்சிப் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த டிரலைரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், சிறு வயதிலிருந்தே திருமணம் பற்றிய கனவு நிறைய இருந்தது. எனக்கும் சோஹேலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தபோது எனது முழு குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. திருமண நாளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் பத்திரமாக பொக்கிஷப்படுத்த வேண்டும் என்று நினைத்ததாக ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். ஒரு விசித்திர மாயாஜாலமாக என் கனவு திருமணம் நடந்தேறியது. அந்த இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.







