புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபர்… அடுத்த நொடி நடந்த பயங்கரம்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

செல்ஃபி எடுக்க நபரை புலி தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை சமீபத்தில் அதிகரித்து உள்ளது. இவை, பெரும்பாலும் துயரமான சம்பவங்களில் முடிவடைகிறது. இது போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது. தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற ஒரு இந்தியர் சங்கிலியால் கட்டியிருந்த புலியை கூட்டி வந்தார். பின்னர் ஒரு பாதுகாவலர் அங்கு வந்தார். இந்தியர் அந்த புலியுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதையும் படியுங்கள் : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… “பெங்களூரு கோப்பை வென்றால் இதை செய்ய வேண்டும்” – கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்த தீவிர ரசிகர்!

பாதுகாவலர் ஒரு குச்சியை வைத்து புலியை உட்காருமாறு கூறிய நிலையில் அந்த இந்தியர் புலியின் அருகே அமர்ந்து செல்ஃபி எடுக்க தயாரானார். அப்போது திடீரென அந்த புலி அவர்மீது பாய்ந்து அவரை தாக்க தொடங்கியது. அத்துடன் அந்த வீடியோவில் எதுவும் சரியாக தெரியவில்லை. அந்த நபர் கத்தும் சப்தம் மட்டும் கேட்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் கவலை தெரிவித்தனர். மேலும் அவர் நலமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினர். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். இதனை பார்த்த நபர் ஒருவர், அந்த நபர் உயிர் பிழைத்தாரா? என்று கேட்டதற்கு, வீடியோவை வெளியிட்ட நபர், “ஆம், வெளிப்படையான, சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தார்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.