முக்கியச் செய்திகள் குற்றம்

கடன் வாங்கியவரின் 7 வயது மகனை கடத்திய நபர் கைது!

தருமபுரி அருகே கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு கொடுக்காததால் பணம் வாங்கியவரின் 7 வயது மகன் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் இவருக்கு அபிநயா என்ற மனைவியும், அஜித், ஹரிஷ் என்ற இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆட்டோ ஓட்டுனரான ராஜசேகருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த சரவணகுமார் தருமபுரி வரும்போதெல்லாம் ராஜசேகர் வீட்டில் தங்குவது வழக்கம். இந்நிலையில் ராஜசேகருக்கு பணம் தேவைப்படும்போதும் சரவணகுமார் கொடுத்து உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜசேகரின் மனைவியும், அவரது தாயும் இணைந்து சரவணகுமாரிடம் மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.80,000 கடனாக பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சரவணகுமார் தான் கொடுத்த பணத்தை கேட்டபோது தற்போது எந்தப் பணமும் தங்களிடம் இல்லை என இருவரும் கூறியுள்ளனர். பின்னர் வழக்கம்போல் கோயம்புத்தூரில் இருந்து சரவணகுமார் ராஜசேகரின் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்து தங்கியுள்ளார். நேற்று காலை அவர்கள் எழுந்து பார்த்தபோது, வீட்டில் சரவணகுமாரையும், ராஜசேகரின் 2வது மகனையும் காணவில்லை. இதனால் ராஜசேகரும் அவரது மனைவியும் மகனை தேடி அலைந்துள்ளனர்.

எங்கு தேடியும் கிடைக்காததால் சரவணகுமார் தான் தங்களது மகனை கடத்திச் சென்றதாக நகர காவல் நிலையத்தில் ராஜசேகரன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து சிறுவனையும் சரவணகுமாரையும் தேடினர். பின்னர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், சரவணகுமாரின் செல்போன் எண்ணையும் வைத்து அவர் கோவையில் இருப்பதை கண்டறிந்தனர். கோவையில் இருந்த சரவணகுமாரை போலீசார் கைது செய்து சிறுவனை மீட்டனர்.

Advertisement:

Related posts

போராட்டம் முடிவுக்கு வருமா? பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்களுக்கு மத்திய அரசு அழைப்பு!

Saravana

தாயை வெட்டிக் கொன்ற மனநலம் பாதித்த மகனுக்கு வலைவீச்சு!

Gayathri Venkatesan

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்: 7 ஆம் தேதி நடக்கிறது

Karthick