முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

10 வருடமாக காதலியை தனியறையில் மறைத்தது எப்படி?

’இப்படியெல்லாமா நடக்கும்?’ என்று ஆச்சரியப்படும்படியான சம்பவம்தான் இது. தனது சிறிய வீட்டில் பத்துவருடமாக காதலியை மறைத்து வைத்து இளைஞர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்றால், அது ஆச்சரியம்தானே!

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கிறது அய்லூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ரஹ்மான். எலெக்ட்ரிஷியனான இவருக்கும் பத்து வீட்டைச் சேர்ந்த சஜிதாவுக்கும் காதல். இந்த காதலை வீட்டில் உள்ளவர்களும் உறவினர்களும் ஏற்கமாட்டார்கள் என்ற பயம், ரஹ்மானுக்கு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனால், தனது சிறிய வீட்டில், காதலியுடன் மறைந்து வாழலாம் என முடிவு செய்தார். காதலியிடம் சொன்னதும், சரி என்றார். கடந்த 10 வருடத்துக்கு முன் ஒரு நாள் தனது வீட்டில் இருந்து ரஹ்மானின் வீட்டுக்கு சத்தம் போடாமல் வந்தார் வந்தார் சஜிதா. ரஹ்மானின் வீடு சிறியது என்றாலும் அங்கு காதலிக்கு என ரகசிய அறை ஒன்றை உருவாக்கி இருந்தார், தீரா காதலர் ரஹ்மான்.

இதற்கிடையே, மகளை காணவில்லை என்று சஜிதாவின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, சஜிதா சத்தம் போடாமல் பக்கத்து வீட்டிலேயே காதலருடன் வாழ்ந்து வந்தார். ஒரு மாதம், இரண்டு மாதமல்ல, 10 வருடங்கள்!

காதலிக்கான அறையில் டெக்னிக்கலான வசதிகளை ஏற்படுத்தினார் ரஹ்மான். சுவிட்ச் போட்டால் பூட்டும் வகையில் அறைக் கதவை மோட்டார், பேட்டரி மூலம் உருவாக்கினார். டிவி சத்தம் கேட்காமல் இருக்க இயர் போன், அறை கதவில், வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத வகையில் துவாரம் என பல்வேறு வசதிகளை உருவாக்கினார். ஜன்னல் கம்பியை அகற்றிவிட்டு உள்ளே இருந்து திறக்கும் வகையில் பலகை வைத்துள்ளார். அதன் வழியே சஜிதா வெளியே வந்து துணி துவைப்பது, குளிப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சஜிதாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வித்தனாசேரியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் ரஹ்மானை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார் அவர் தம்பி.

இந்த நிலையில் தான் ரகுமானின் தம்பி அவரை சில நாட்களுக்கு முன் கண்டுபிடித்துள்ளார். போலீசார் ’எங்கய்யா திடீர்னு காணாம போன?’ என்று விசாரித்தபோதுதான், மொத்தக் கதையும் வெளி வந்தது. இந்த கதையை கேட்டு கேரளாவில் அதிர்ச்சி.

பத்து வருடத்துக்கு முன் காணாமல் போன மகள் கிடைத்ததை அடுத்து, சஜிதாவை அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறார்கள் பெற்றோர்.

’என் காதலுக்காக இப்படி செய்தேன். சஜிதா மதம் மாறவில்லை. அவரை மதம் மாற நான் சொல்லவில்லை, எங்கள் காதல் அதையும் தாண்டியது’ என்று தெரிவித்திருக்கிறார் ரஹ்மான். இப்போது போலீசாரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவர்களின் புதிய வாழ்க்கைக்கு உதவி செய்து வருகிறார்கள். போலீசார் அவர்களுக்கு ஸ்டவ் அடுப்பையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் பரிசாக கொடுத்திருக்கிறார்கள்!

காதலுக்கு கண்ணில்லை என்பது சரிதானே!

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

அரசு கடமையை செய்கிறது: ரெய்டு குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்

EZHILARASAN D

ஜூலை 2022 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,48,995 கோடி

Mohan Dass