முக்கியச் செய்திகள் உலகம்

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி மறுத்துள்ளது.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலகின் பல நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிட்ஷில்டு, ஸ்புட்னிக் வி, பைசர் உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்திருந்தது. இதை இந்தியா, ஈரான், நேபால் உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் அமெரிக்க ஒப்பந்த நிறுவனமான ஒகுஜென் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், கூடுதலாக பரிசோதனைகள் நடத்தி முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னரே தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என கூறி அந்த விண்ணப்பத்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு நிராகரித்துள்ளது.

Advertisement:

Related posts

கூட்டணி குறித்து கமல்ஹாசன் பேச்சு!

Niruban Chakkaaravarthi

புயல் சேதத்தை பார்வையிடுகிறார் பிரதமர்!

உலகம் முழுவதும் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள்!

Jayapriya