அசாம், மேற்கு வங்க 2ம் கட்டத் தேர்தல்: அமைதியாக முடிந்தது!

அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் இரண்டாம்கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றது. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா புதுச்சேரியில் வரும்…

அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் இரண்டாம்கட்ட தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழகம், கேரளா புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடக்கிறது. இரு மாநிலங்களிலும் முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று 30 தொகுதிகளில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் அடங்கும். அந்த தொகுதியில் அவருக்கு எதிராக, பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி களம் காண்கிறார். வாக்குப் பதிவு முடிவில் 80.43 சதவிகிதம் வாக்குகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோல் அசாமிலும் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 39 தொகுதிகளில் இரவு 7.30 மணி நிலவரப்படி 76.96 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இரு மாநிலங்களிலும், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.