நேபாளத்தில் 96 வயது முதியவர் ஒருவர் தனது பேரனின் திருமண விழாவில் நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபகாலமாக நடக்கும் திருமண விழாக்களில் மணமக்கள் உட்பட உறவினர்கள், விருந்தினர்கள் அனைவரும் நடனம் ஆடுவது பல இடங்களில் வாடிக்கையாகி உள்ளது. அது பணக்கார குடும்பங்களில் நடைபெறும் திருமணமாக இருந்தாலும் சரி, கிராமப்புறங்களில்
நடைபெறும் திருமணமாக இருந்தாலும் சரி அனைவருமே வயதையும், கேலியையும் பொருட்படுத்தாமல் தங்கள் விருப்பம் போல் நடனமாடுவார்கள். அந்த வகையில் சமீபத்தில் நேபாளத்தை சேர்ந்த 96 வயது முதியவர் ஒருவர் தனது பேரனின் திருமண விழாவில்
நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேபாளத்தில் இருந்து வெளியான அந்த வீடியோவில், திருமண விழாவில் கலந்துக் கொண்ட சில விருந்தினர்கள் அந்த வயதான முதியவர் அருகில் நின்று நடனமாடுகிறார்கள். இதனால் உற்சாகமான அந்த வயதான முதியவரும் பின்னணியில் ஒலித்த நேபாள இசைக்கு ஏற்றவாறு அழகிய நடன அசைவுகளை வெளிப்படுத்துக்கிறார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் “காதலையும், அன்பையும் கொண்டாடும் போது வயது என்பது வெறும் எண்தான் ! அந்த வகையில் 96 வயதான தாத்தா தனது பேரக்குழந்தையின் திருமணத்தில் நடமாடுவதைப் பாருங்கள்,” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இப்படி தாத்தாவின் அன்பை பேரக்குழந்தைக்கு நடனத்தின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள இந்த வீடியோ இதுவரை 76 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று அதிக அளவில் பகிரப்பட்டும் வருகிறது.
- பி.ஜேம்ஸ் லிசா








