அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்து!

மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல்…

மதுரையில் அரசு மருத்துவக்கல்லூரி குப்பைத் தொட்டியில் ரெம்டெசிவர் மருந்துகளை பதுக்கி வைத்து, அதனை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் கடந்த சனிக்கிழமை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில்,ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையத்தில் மருந்து பெட்டிகளை, ஊழியர்கள் மூலம் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, பின்னர், அதனை எடுத்து வெளிச் சந்தையில் விற்பனை செய்யும் அதிர்ச்சி அரங்கேறியுள்ளது.

இதனை மருந்து வாங்க காத்திருந்த நோயாளி ஒருவரின் உறவினர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஏற்கனவே, மதுரை ரெம்டெசிவர் மருந்து விற்பனை நிலையத்தில், முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது, அது வீடியோ ஆதாரத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதா நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.