தெலங்கானாவில் இன்று காலை 10 மணி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கானது மே 22 ஆம் தேதி வரை தொடரும்.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்துவருகிறது. தமிழகம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. மருத்துவப் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இந்த கடுமையான சூழ்நிலையைச் சமாளிக்க மருத்துவத்துறை திணரிவருகிறது. இதைக்கருத்தில் கொண்டு மாநில அரசுகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மே 16 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் தெலங்கானாவில் இன்று காலை 10 மணி முதல் வருகின்ற மே 22 வரை ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை எல்லா கடைகளும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேளாண்மை தொடர்பான பணிகளுக்கு மட்டும் முழு நேரம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த திங்களன்று தெலங்கானாவில் 4,826 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.