மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 45 மாதங்களில் மருத்துவமனை கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் 27 மாதங்கள் கடந்தும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதுகுறித்து தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான கடன் ஒப்பந்தம், 2021 மார்ச் 26-ல் இந்தியா – ஜப்பான் அரசுகள் இடையே கையெழுத்தானது. பின்னர் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் நடைமுறைகள் தொடங்கியுள்ளது.
மேலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த திட்ட மதிப்பீடு 1, 264 கோடி ரூபாய் எனவும், திட்ட மதிப்பீடு உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.







