முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு!

கொரோனா சிகிச்சையின்போது பணியாற்றி, கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவ பணியாளர்களின் பணி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.கொரோனாவின் முதல் அலை இந்தியாவைப் பாதித்தபோது சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள் பலரும் உயிரிழந்தனர். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையை இந்தியா சந்தித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைத்த மு.க ஸ்டாலின், கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அறிவித்துள்ளார்.

இவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்ச ரூபாய் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்,துப்புரவுப் பணியாளர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள், சிடி ஸ்கேன் பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன்படி ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000 வழங்கப்படும். இதுபோல் செவிலியர்களுக்கு ரூ.20,000, இதரப் பணியாளர்களுக்கு ரூ15,000 வழங்கப்படும். பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகையாக ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

“தொகுதிவாரியான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்” – மநீம மகேந்திரன்

Saravana Kumar

கொட்டும் மழையில் தடுப்புசி செலுத்த காத்திருந்த மக்கள்

ராஜஸ்தான், ம.பி,கேரளாவை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரிலும் பரவியது பறவை காய்ச்சல்; 150க்கும் அதிகமான காகங்கள் உயிரிழப்பு!

Saravana