முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உறவினர்களுடன் வீடியோகால் பேச முருகன், நளினிக்கு அனுமதி!

முருகன், நளினி ஆகியோர் தங்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசிக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சமீபத்தில் முருகன் தனது தந்தை இறந்த முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க பரோல் வேண்டி விண்ணப்பித்திருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி நளினியும் பரோலுக்கு விண்ணப்பித்தார். ஆனால், காவல்துறை சார்பில் பரோலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள முருகனின் தாயார் மற்றும் சகோதரியிடம் வீடியோ கால் மூலம் முருகன் மற்றும் நளினி ஆகியோரை பேச அனுமதிக்க வேண்டுமென நளினியின் தாயார் பத்தமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி கிருபாகரன், வேலுமணி அமர்வு விசாரித்தது.

இதனையடுத்து முருகனும் நளினியும் வெளிநாட்டில் உள்ள முருகனின் தாயார் மற்றும் சகோதரியிடம் வீடியோ கால் மூலம் பேசலாம் என்றும், தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

சாமானியர்களுடன் …தெற்கே ராகுல்; வடக்கே ப்ரியங்கா

Niruban Chakkaaravarthi

சென்னையில் வீட்டிற்கே வந்த கொரோனா தடுப்பூசி!

Gayathri Venkatesan

மனைவி விருப்பமின்றி பாலியல் உறவு கொண்டால் விவாகரத்து கோரலாம்: கேரள உயர் நீதிமன்றம்

Gayathri Venkatesan