கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதம்!

கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி  மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகத்திலிருந்து தினந்தோறும் சென்னைக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் என பயணம் மேற்கொண்டு…

கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கக் கோரி  மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகத்திலிருந்து தினந்தோறும் சென்னைக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கல்லூரிக்கும், வேலைக்கும் என பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு இவர்கள் பயணம் மேற்கொள்ள போதிய ரயில்கள் இல்லை. ஒரு சில ரயில்கள் மட்டுமே இருப்பதாகவும் அதிலும் குறைவான பெட்டிகள் இருப்பதால் பயணிகள் நெருக்கடியாகவும் ரயில் படிகளில் தொங்கிய படியும் ஆபத்தான பயணத்தை தினந்தோறும் மேற்கொள்கின்றனர்.

ஆகவே இங்கு நிற்கின்ற ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். மேலும் ஒரு சில ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்கின்ற கோரிக்கை வைத்து பல முறை ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர் ஆனால் ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளாததால் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

—-ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.