முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில், சிபிசிஐடி போலீசார் மூலம் கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கரூர் வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் அளித்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மீண்டும் சிறையில் உள்ள விஜயபாஸ்கரை வியாழக்கிழமை காலை கைது செய்தனர். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் நாளை அல்லது நாளை மறுநாள் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீண் ஆகிய இருவரும் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.