உயிரைப் பறித்த ரீல்ஸ் மோகம்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் பலி!

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில்…

நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27),  ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளர்.

மும்பையைச் சேர்ந்த ஆடிட்டர்கள் குழு மழைக்காலப் பயணமாக, மங்கான் பகுதியில் சுற்றி பார்க்க வந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் விழுந்தார்.

கம்தாரின் நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அன்வி 6 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

ஆனால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த அன்வி காம்தர், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தயாரிப்பதில் பெயர் பெற்ற சமூக ஊடக செல்வாக்கு பெற்றவர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 2,50,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.