முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி தற்போது வரை நீடித்து வருகிறது. எனினும், கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  1,52,734 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,80,47,534 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு 3128 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,29,100 ஆக உயர்ந்துள்ளது.  2,38,022 பேர் குணமடைந்துள்ளதால்  மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2,56,92342 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தற்போது 29,26,092 ஆக உள்ளது. இதேபோல, தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 10,18,076 ஆகவும், இதுவரை மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21,31,54,129 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 16,83,135 மாதிரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த பரிசோதனை எண்ணிக்கை 34,48,66,883 ஆகவும் உயர்ந்துள்ளது. 

கடந்த 50 நாட்களில் இன்றுதான் குறைந்த அளவிலான தினசரி தொற்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 18வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை, தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருகிறது.  

Advertisement:

Related posts

தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த விவேக்கின் மகள்!

Karthick

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு

Gayathri Venkatesan

தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: பிரதமர்

Ezhilarasan