முக்கியச் செய்திகள் தமிழகம்

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வானிலை மையம்!

லட்சத்தீவு கேரளா கடல் உள்ளிட்ட தென்மேற்கு அரபிக் கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் மற்றும் வெப்பசலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக கன மழை பெய்தது. மழை தற்போது ஓய்ந்துள்ள நிலையிடில, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களிலும், பலத்த சூறை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல், லட்ச தீவு, கேரளா கடல் உள்ளிட்ட தென் மேற்கு அரபி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

இதைத்தொடந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் மணக்குடி முதல் நீரோடி வரை உள்ள விசை படகுகள் மற்றும் நாட்டு படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் தங்கள் படகுகளையும் பாதுகாப்பான முறையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

Advertisement:

Related posts

பயணத்தை தொடர்ந்தது எவர் கிவன்!

Karthick

18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி: திருப்பூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

Karthick

உலக சுகாதார நிறுவனம் கவலை!

Vandhana