முக்கியச் செய்திகள் குற்றம்

பயிற்சியாளர் நாகராஜன் சிறையில் அடைப்பு!

இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் 12 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை பாரிமுனையில் ப்ரைம் ஸ்போர்ட்ஸ் அகடாமி என்ற பெயரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நாகராஜன் தடகளப் பயிற்சி அளித்து வந்துள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் ஒருவர் நாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விருகம்பாக்கம் ஐஏஎஸ் ஐபிஎஸ் குடியிருப்பில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து நாகராஜனை 12 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:

Related posts

பாலியல் வழக்கின் கருத்துக்கள் தவறாக வெளியிடப்பட்டதாக உச்ச நீதிமன்றம் விளக்கம்!

Karthick

“நாம் தமிழர் வென்றால் அது புரட்சி” – சீமான்

Saravana Kumar

15 பேருக்கு கொரோனா ? மதுரை விமான நிலையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

Karthick