கோவையில் உள்ள தொழிலதிபர் மாரட்டின் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
இந்நிலையில், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் வீடு மற்றும் அலுவலகம், கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் காந்திபுரம் பகுதியில் உள்ள வணிக கட்டிடம் உட்பட நான்கு இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!
அதேபோல் சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ARICE என்ற நிறுவனத்தின் பங்குதாரரான அர்ஜுன் ஆதவா என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இவர் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். மேலும் இவர் தமிழ்நாடு ஒலிம்பிக் கூடைப்பந்து சங்க தலைவராகவும் உள்ளார். கடந்த மே மாதம் இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள, News7 Tamil – ன் WhatsApp Channel– ல் இணைய – க்ளிக் செய்யுங்கள்!







