சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் அப்பகுதியில் உள்ள முட்புதர்களில்
கிடந்தது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டு பக்தர்களும் வந்து தங்களது நேர்த்திக்கடனை சமயபுரம் கோயில் உண்டியலில் செலுத்தி வருவது வழக்கம். இந்த பக்தர்கள் செலுத்தும் காணிக்கை உண்டியல்களை, மாதம் இருமுறை திறந்து எண்ணுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த உண்டியல் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள
திருமண மண்டபம் பின்பகுதியில் உள்ள முட்புதர்களில் கிடந்தது. இந்த உண்டியலில் இருந்த பணத்திற்காக எடுத்துச் சென்றதாக தெரிகிறது.
இது குறித்து கோயில் இணை ஆணையர் கல்யாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த உண்டியல் பழமையான உண்டியல். இதனை கோயில் திருமண மண்டபத்தில்
பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் இந்த உண்டியலை கோயில் நிர்வாகத்திற்கு கெட்ட
பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் யாரோ எடுத்து முட்புதர்களில்
வீசி சென்றுள்ளனர். இதனை விசாரிக்க திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்பி யிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ம. ஸ்ரீ மரகதம்







