தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது நாளுக்கு நாளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. அதிலும் சமீப காலமாக காற்றின் தரம் அதிகளவில் சீர்க்கெட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலமையை சரிசெய்யும் நோக்கில் மாநில அரசு பல்வேரு நடவடிக்கையைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி பள்ளிகளுக்கு நேரடி வகுப்பிற்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களில் 50% பேருக்கு வீட்டில் இருந்தே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் விதமாக, கட்டுமான பணிகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும் பழைய டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் டெல்லி கற்று மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், காற்று மாசு காரணமாக பள்ளிகளை மூடினால் மதிய உணவுத் திட்டம் பாதிக்கப்படும்.
இதனால் ஏழை குழந்தைகள் பாதிக்கப்படுவர். ஆகையால் 1 முதல் 5 வரை பள்ளிகளை முழுமையாக மூடாமல் ஆன்லைன் மூலமாகவும் நடத்த வேண்டும் என்றும் காற்று மசால் கட்டுமானப் பணிகள் முடங்கி உள்ளதால் வேலை இல்லாத பணியாளர்களுக்கு அரசு உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வாதிட்டது.
இதுயடுத்து நீதிபதிகள், காற்று மாசை தடுக்க நீண்ட கால திட்டங்களை வகுக்க வேண்டும். காற்று மாசுவால் சிறுவர்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் 3 மாதங்கள் கட்டிட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகிறது. இதனல் அவர்களுக்கு மாற்று வேலை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
சுங்க சாவடிகளில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருப்பதை தடுக்க அக்டோபர் முதல் ஜனவரி வரை டெல்லியை சுற்றி உள்ள சுங்க சாவடிகளை மூடலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளது. மேலும் காற்று மாசை தடுப்பது குறித்து டெல்லி மாகராட்சி, டெல்லி அரசு, காற்று தர மேலாண்மை ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.







