மக்களவையில் சிகரெட் பிடித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி வீடியோவை வெளியிட்ட பாஜக!

மக்களவையில் சிகரெட் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யின் வீடியோவை பாஜக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே நாளை மறுதினம் இக்கூட்டத் தொடர் நிறைவடையவுள்ள நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமித் மால்வியா அவரது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் சிகரெட் பிடிப்பதாக பா.ஜ.க எம்.பி அனுராக்சிங் தாகூர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில் அனுராக சிங் தாக்கூர் குற்றம்சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கீர்த்தி ஆசாத் என்றும், அவர் உள்ளங்கையில் மறைத்து வைத்திருந்த சிகரெட் மூலம் நாடாளுமன்ற அவைக்குள் அமர்ந்து சிகரெட் பிடித்ததாக வீடியோவை பதிவிட்டு அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் புகை பிடிப்பது சட்டவிரோதமானது அல்ல என்றாலும் நாடாளுமன்றத்திற்குள் சிகரெட் பிடிப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யின் முறைகேடானா நடத்தை குறித்து அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.