“பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்துவார்” – செல்வபெருந்தகை பேட்டி!

“இந்த தேர்தலில் பாசிச சக்திகளை வீழ்த்தும் சூரசம்ஹாரம் நடைபெறும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை சுவாமி…

“இந்த தேர்தலில் பாசிச சக்திகளை வீழ்த்தும் சூரசம்ஹாரம் நடைபெறும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.  பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“ஒருசாராரை வீழ்த்த நினைக்கும் அசுரர்களை போல,  இன்றும் அரக்கர்கள் உள்ளனர். அவர்களை இந்த தேர்தலில் திருச்செந்தூர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வார். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.  400 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்.  கூட்டணி பலமாக இருக்கிறது.  எழுச்சியாக இருக்கிறது.  மக்கள் புரிந்துகொண்டார்கள்.

மக்கள் ஏற்றுக் கொண்ட பிரதமர் வேட்பாளர்  ராகுல் காந்திதான்.  தேசத்தின் ஒருமுகம்,  ஒரு குரல் ராகுல்காந்தி.  மோடி எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் தமிழர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  தமிழர்களின் பெருமை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் அழிக்கத்துடிக்கிற பாசிச சக்திகளை முருகப்பெருமான் வீழ்த்துவார்”

இவ்வாறு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.