முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே மாத தொடக்கத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் படிப்படியாக குறையத் தொடங்கியதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. தற்போது தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு செப்டம்பர் 6ம் தேதியுடன் நிறையவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை செப்டம்பர் 15 வரை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவித்தவாறு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடுகள், திருவிழாக்கள் நடத்துவதற்கான தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய் பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

நடிகை மீரா மிதுனுக்கு 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

Gayathri Venkatesan

பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

Gayathri Venkatesan

தீவிர பரப்புரையில் எல்.முருகன்!

Jeba Arul Robinson