விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. இப்படத்தில், யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகியுள்ளது.
சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், இன்று படத்தின் ட்ரையிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் படத்திற்கான ட்ரெய்லரை சூர்யாவும், மலையாள ட்ரெய்லரை மோகன்லாலும், தெலுங்கு ட்ரெய்லரை வெங்கடேஷும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டனர். படம் செப்டம்பர் 17ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.







