பீகாரில் லாக்-அப் மரணம்: காவல்நிலையத்தை சூறையாடிய பொதுமக்கள்

பீகாரில் லாக்-அப் மரணம் காரணமாக, காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர். கதிஹர் அருகே பிரன்பூர் என்ற இடத்தில் ரோந்து பணியின்போது, மதுபானம் கடத்திய புகாரின்பேரில் பிரமோத் குமார் சிங் என்பவரை…

பீகாரில் லாக்-அப் மரணம் காரணமாக, காவல்நிலையத்தை பொதுமக்கள் சூறையாடிய நிலையில், போலீசார் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

கதிஹர் அருகே பிரன்பூர் என்ற இடத்தில் ரோந்து பணியின்போது, மதுபானம் கடத்திய புகாரின்பேரில் பிரமோத் குமார் சிங் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி பிரமோத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள், பிரமோத்தை போலீசார் அடித்துக் கொன்றதாக குற்றஞ்சாட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், காவல்நிலையம் முழுவதும் சேதமடைந்த நிலையில், போலீசார் பலரும் படுகாயமடைந்தனர். எஸ்.ஐ. உள்ளிட்ட சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

-பரசுராமன்.ப
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.