தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மார்ச் 2 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை……!

மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 2 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் இந்தியாவின் கும்பமேளா என்றழைக்கப்படும் மாசி மகம் திருவிழாவானது மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மகம் நட்சத்திரம் குரு சிம்மராசியில் இருக்கும் போது வரும் நாளில் கொண்டாடபடுகிறது. அதன் படி இந்த ஆண்டு மாசி மகத்திருவிழாவானது மார்ச் 02.2026 ( மாசி 18) அன்று கொண்டாடப்படுகிறது.

தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த  திருவிழா கொண்டாப்பட்டாலும் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கும்பேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் நடக்கும் மாசிமகத் திருவிழாவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகத் திருவிழாவில் ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடுகின்றனர்.

இந்த நிலையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 2 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் டஉத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்ய 14ம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.