இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு

இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இங்கிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவில் கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று வாக்களித்தனர்.…

இங்கிலாந்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவில் கன்சர்வேடிவ் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்று வாக்களித்தனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் கன்சர்வேட்டிவ் கட்சியின் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 2012 முதல் 2014ம் ஆண்டு வரை டேவிட் கேம்ரூன் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் அமைச்சரகாகவும், தெரசா மே அமைச்சரவையில் 2016 முதல் 2017 வரை நீதித்துறை அமைச்சரகாவும், 2017 முதல் 2019 வரை நிதித்துறை அமைச்சராகவும் இருந்தார். இதேபோல் போரீஸ் ஜான்சன் அமைச்சரவையில் வர்த்தகத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பிரதமர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.

பலகட்டமாக நடைபெற்ற இத்தேர்தலின் இறுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த் லிஸ் டிரஸ் மற்றும் இந்தியா வம்சாவளியை சேர்ந்த் ரிஷிசுனக் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர். தொடக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு அதிகமாக காணப்பட்டது.

இந்த பிரதமர் தேர்தலில் லிஸ் டிரஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வம்சாவளி ரிஷி சுனக் தேர்தலில் தோல்வியை தழுவினார். இங்கிலாந்தின் பிதிய பிரதமராக டிஸ் டிரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து இங்கிலாந்தின் 3வது பெண் பிரதமர் என்ற பெருமையை லிஸ் டிரஸ் இவர் பெற்றுள்ளார். இந்த தேர்தலில் லிஸ் டிரஸ் 81,326 வாக்குகளும், ரிஷி சுனக் 60,399 வாக்குகளும் பெற்றனர்.

பிரிட்டனில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து லிஸ் டிரஸ் புதிய பிரதமாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, தொழில்துறை மந்தநிலையை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் லிஸ் டிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.